என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆவணி திருவிழா
நீங்கள் தேடியது "ஆவணி திருவிழா"
மேளதாளங்கள் முழங்க, முத்துக்குடையும், சிங்காரி மேளமும் முன்செல்ல முத்திரி பதம் மற்றும் சந்தன குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அரசம்பதியை நோக்கி சென்றனர்.
பொற்றையடி அருகில் உள்ள அரசம் பதியில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடையும், காலை 9 மணிக்கு சாமிதோப்பில் உள்ள முத்திரிகிணற்றிலிருந்து முத்திரி பதம்எடுத்து, பெண்கள் சுருள் ஏந்தி தலைமைப்பதியில் அய்யா தவம் புரிந்த வடக்கு வாசல் பகுதிக்கு வந்தனர்.
அங்கு அய்யாவை வழிபட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, முத்துக்குடையும், சிங்காரி மேளமும் முன்செல்ல முத்திரி பதம் மற்றும் சந்தன குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அரசம்பதியை நோக்கி சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு அன்பாலய நிறுவனர் சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் சாமி தோப்பில் இருந்து புறப்பட்டு கரூம்பாட்டூர் வழியாக அரசம்பதி வந்தடைந்தது.
அங்கு உச்சிப்படிப்பு நடைபெற்றது. தொடர்ந்து சமபந்தியும், பகல் 3 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும், இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், இரவு 9 மணிக்கு அன்னதானமும் தொடர்ந்து அருளிசை வழிபாடும், நள்ளிரவு 12 மணிக்கு சான்றோர் குல மங்கையர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு பால் வைத்து பணிவிடை செய்தலும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் அரசம்பதியில் இன்று (26-ந்தேதி) மாலை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் அரசம்பதியில் கார்த்திகை மாத ஏடு வாசிப்பு கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (26-ந்தேதி) மாலை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இரவு வென்குதிரை வாகனத்தில் அய்யா பவனி வருகிறார். நாளை (27-ந்தேதி) மதியம் 3 மணிக்கு திருஏடு வாசிப்பும், மாலை 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பவனி வருதலும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 28-ந் தேதி காலை சுவாமி தோப்பில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
அதன்பின் மதியம் 12 மணிக்கு உச்சி பணிவிடையும், அன்னதர்மமும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு ஏடுவாசிப்பு தொடங்கி, 7 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், 9 மணிக்கு தாலாட்டும், அதன்பின் அருளிசை வழிபாடும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள்பெற அரசம்பதி கோவில் நிர்வாகிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குமரியில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறுகிறது.
ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது. இக்கோவிலில் இருகொடிமரங்கள் உள்ளது. சித்திரை மற்றும் மார்கழி திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், காலை 9.45 மணிக்கு திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்துவந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண்மடம் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர் சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடக்கிறது.
9-ம் நாள் திருவிழாவான வருகிற 22-ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க கோலாகலமாக பக்தர்கள் இழுத்து வருவார்கள்.
10-ம் நாள் திருவிழாவான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவான் அதிகாலை 4 மணியளவில் பசு கன்றுகுட்டி முகத்தில் விழித்து எழுதல், தொடர்ந்து 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
நேற்று 8-ம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
9-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.
10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவில் சுவாமி-அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாலையில் கீழ ரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாள் மற்றும் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.
8-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 8-ந்தேதி(சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 30-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆவணித் திருவிழாவின் 5-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் நேற்று 2-வது நாளாக கரைபுரண்டு ஓடியது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்த படி தண்ணீர் செல்கிறது.
இதனால் அங்குள்ள உற்சவர் சிலை மெயின் ரோட்டில் உள்ள மேலகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. வருகிற 22-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் நெல்லை மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி காலை சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர்வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந் தேதி தீர்த்தவாரி, அன்று இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9 மணிக்கு சுவாமி தெப்ப மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருவிழாவான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். வருகிற 20-ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் சந்திரசேகரராகவும், காந்திமதி அம்பாள் பவனி அம்பாளாகவும் சப்பரத்தில் பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார், சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள்.
21-ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

×

X